ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டதினால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் எவை? (Which Were The Mysteries Revealed By The Opening Of The 7 Seals?) பரிசுத்த மத்தேயு 13:10-17, அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிற படியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறை வேறுகிறது; அதாவது காதாரக் கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமாலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவை களைக்காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும்,காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.'' வெளிப்படுத்தல் 10:6 ''ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும்,'' பாருங்கள்! ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியம், தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான இரகசியம் இப்பொழுது விசுவாசியின் இருதயங்களில் வைக்கப்பட்டிருக்கின்றது, அதாவது கிறிஸ்துவின் சரீரத்தில். ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியமாக உலகத் தோற்றத்திற்கு முன்னர் தம்முடைய சிந்தையில் இருந்த ஒன்று இப்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! ஓ அதை நாம் புரிந்து கொள்ளவில்லையென்று நிச்சயமாக எனக்குத் தெரியும். நல்லது, எவ்விதமாக நான் அதைக் காண வேண்டுமோ அவ்விதமாக என்னால் அதைக் காண முடியவில்லை, ஆகவே உங்களால் முடியவில்லை என்றும் நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். ஆனால் தேவனுடைய மகத்தான் இரகசியம், நித்திய தேவன் எதை ஒரு இரகசியமாக வைத்திருந்தாரோ , இப்பொழுது அது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமாக்கப்பட்டு பிறகு சரியாக தம்முடைய சபைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் தேவனுடைய சிந்தையில் இருந்தவை இப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கின்றது. இயேசு தமது மணவாட்டியாகிய சபையை நோக்கி காதல் செய்து இரகசியங்களை குசுகுசு வென்ற அவளிடம் மெல்லப் பேசிக்கொண்டிருக் கின்றார். நீங்கள் விவாகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துள்ள பெண்ணிடம் உங்கள் இரகசியங்களை எப்படி சொல்வீர்கள்? அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, அவளை சிநேகிப்பதாகக் கூறி, அவளிடம் உங்கள் அந்தரங்க இரகசியங்கள் அனைத்தையும் குசுகுசுவென்று கூறுவீர்கள் அல்லவா? அது எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும். அதைத்தான் தேவன் - கிறிஸ்து சபைக்கு செய்துகொண்டிருக்கின்றார். அவள் இரகசியங்களை - இரகசியங்களை மாத்திரம் அறியும்படி செய்கிறார். எல்லாரிடம் சல்லாபம் செய்யும் பெண்களிடம் அல்ல; அவருடைய மனைவியிடம். இப்பொழுது, அவன் முழங்குகையில், இந்த செய்தியாளன், ஏழாம் தூதன், இங்கே, லவோதிக்கேயா சபைக்கு தன் செய்தியை முழங்குகிறான். அவனுடைய செய்தியின் தன்மையைக் கவனியுங்கள். இத்தகைய செய்தி முதலாம் தூதன், இரண்டாம் தூதன், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் தூதர்களுக்கு அளிக்கப்படவில்லை: ஆனால் ஏழாம் தூதன் மாத்திரமே இத்தகைய செய்தியைக் கொண்டவனாயிருக்கிறான். அது என்ன செய்தி? அவனுடைய செய்தியின் வகையைக் கவனியுங்கள், அது புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா தேவனுடைய ரகசியங்களையும் முடிக்கின்ற ஒன்று. இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புகளினூடாக கிடக்கின்ற தளர்ந்த முனைகளான அந்த எல்லா ரகசியங்களையும் ஏழாம் தூதன் முடித்து வைக்கின்றான். அந்த ஏழாம் தூதன் அவைகளைச் சேகரித்து, முழு ரகசியத்தையும் முடித்து வைக்கின்றான். அதைத்தான் வேதாகமமும் கூறியிருக்கின்றது: அவன் எழுதப்பட்ட புஸ்தகத்தின் ரகசியத்தை முடித்து வைக்கின்றான். வெளிப்படுத்தல் 10:6-7ன் ஏழாம் தூதன் தான் ஏழாம் சபைக்கால செய்தியாளன் ஆவான். இந்த செய்தியாளன், தன்னுடைய செய்தியை துவங்குகின்ற போதல்ல, ஆனால் அவன் தன்னுடைய செய்தியை அறிவிக்க ஆரம்பிக்கும் அந்த அதே நாளில், கவனியுங்கள், முதலாம் இழுப்பு - தெய்வீக சுகம் அளித்தல்; இரண்டாம் இழுப்பு - தீர்க்கதரிசனம் உரைத்தல், மூன்றாம் இழுப்பு - வார்த்தை திறக்கப்படுதல், இரகசியங்களை வெளிப்படுத்தல், வார்த்தையை வெளிப்படுத்த தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் மேலான ஒரு ஒழுங்கு கிடையவே கிடையாது. ஒரு தீர்க்கதரிசியானவன் நிருபிக்கப்பட வேண்டுமென்றால் ஒரேயொரு வழி தான் உண்டு, அது வார்த்தையைக் கொண்டுதான் அவன் நிருபிக்கப்படுகின்றான். ஆகவே நினைவில் கொள்ளுங்கள் மூன்றாம் இழுப்பு என்பது அந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு வார்த்தையில் முத்திரையிடப்பட்டு அந்த மறைக்கப்பட்டிருந்த சத்தியத்தை வெளிப்படுத்தப்படுதலே ஆகும். உங்களால் அதைக் காணமுடிகின்றதா? இந்த காரியம் நடைபெறப்போகும் இந்த நாளில் தான் போலியாக செய்து காண்பிக்கின்றவர்களாகிய யந்நேயும் யம்பிரேக்களும் மறுபடியுமாக எழும்புவார்கள், மோசே அந்த மூல வார்த்தையைக் கொண்டு வந்து அதை உரைக்கும் படி தோன்றிய போது அவர்கள் அந்த வார்த்தையை போலியாகட் பாவனை செய்ய வந்த விதமாகவே, இப்பொழுதும் வார்த்தையை போலியாகப் பாவனை செய்துகாட்ட அவர்கள் தோன்றுகின்றனர். அது முற்றிலும் சரியே. இப்பொழுது, மத்தேயு 24:24 என்னவென்று உங்களால் காணடிகின்றதா? பாருங்கள்? அபிஷேகம் பண்ண ப்பட்டவர்கள். மல்கியா 4 மற்றும் வெளிப்படுத்தல் 10:6-7ன் இந்த செய்தியாளன் இரண்டு காரியங்களைச் செய்யப்போகின்றார். ஒன்று : மல்கியா 4ன் படி அவர் பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களின் இருதயத்திற்கு திருப்புவார். இரண்டு : ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ள வெளிப்பாடுகளான வெளிப்படுத்தல் 10ல் உள்ள ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார். இந்த தெய்வீக வெளிப்பாடுகளான “இரகசிய - சத்தியங்கள்'' தான் பிள்ளைகளின் இருதயங்களை பெந்தெகொஸ்தே பிதாக்களிடம் திருப்பும். தீர்க்கதரிசிகளால் மட்டுமே இரகசியங்கள் அறியப்படுவதால் (ஆமோஸ் 3:7) இக்கடைசி நாட்களில் தேவனுடைய இரகசியங்களை ஒன்று சேர்த்துக்கொண்டுவர தீர்க்கதரிசியே இருக்க வேண்டும். ஆகவே இவன் தான் அந்த நபராயிருக்க வேண்டும். நான் இப்பொழுது என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? அவன் ஒரு சீர்திருத்தக்காரனாய் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையை கிரகித்துக்கொள்ள அவன் ஒரு வரம் பெற்ற தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இப்பொழுது சீர்திருத்தக்காரர் அவர்கள் காலத்தில் உண்டாயிருந்த தவறுகளை அறிந்திருந்தனர். நற்கருணையில் கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் சரீரமல்ல என்பதை லூத்தர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் ''விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்'' (ரோமர் 1:17) என்று பிரசங்கித்தார். அதுதான் அவருடைய செய்தி. அவ்வாறே, பிறகு ஜான் வெஸ்லி வந்தார், பரிசுத்தமாகுதல் என்பது இருக்கின்றது என்று அவர் கண்டார், ஆகவே அவர் பரிசுத்தமாகுதலைப் பிரசங்கித்தார் (எபி. 10:10, 14; எபி. 12:14). அவருடைய செய்தி அதுவாக இருந்தது. பாருங்கள்? பெந்தெகொஸ்தேகாரர் பரிசுத்த ஆவியைக் குறித்த செய்தியை கொண்டு வந்தனர் (ஏசாயா 28:11-12; அப்போஸ்தலர் 2:1-21). ஆனால் கடைசி நாட்களில், இந்தக் கடைசி காலத்தில், இந்த செய்தியாளன் ஒரு சீர்திருத்தத்தை உண்டாக்குவதில்லை, அந்த சீர்திருத்தக்காரர் விட்டு விட்ட எல்லா தேவரகசியங்களையும் அவன் ஒன்று சேர்த்து ஜனங்களுக்கு அதை வெளிப்படுத்துவான். அவர் என்ன செய்தார்? அவர் கடைசி செய்தியின் ஏழு முத்திரைகளைத் திறந்தார். அதைக் கவனித்தீர்ளா? அந்த ஏழு முத்திரைகள் ஏழு சபை காலங்களின் இரகசியங்கள் அனைத்தும் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது. சீர்திருத்தக்காரர்கள் தங்கள் காலத்தில் அதைச் செய்ய அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவர்கள் போதிய காலம் வாழவில்லை. ஆனால் ஏழு முத்திரைகளைக் குறித்த இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வெளிப்பாடு, நான் அரிசோனாவுக்கு செல்ல வேண்டும் என்னும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு, இந்த கடைசி நாட்களில் நமக்கு திறந்து கொடுக்கப்பட்டது. செய்தித்தாள்கள் அதை வெளியிடுகின்றன, பத்திரிகைகள் அதன் புகைப்படத்தைப் பிரசுரிக்கின்றன. இங்கே திரும்பி வந்து வேதாகமத்தில் மறைக்கப்படிருக்கின்ற அந்த பரம இரகசியங்கள், நாம் இதுவரை அறிந்திராத வகையில் இப்பொழுது நமக்கு முன்பாக அது திறந்தளிக்கப்பட்டிருக்கின்றதைப் பாருங்கள், அவை கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு அது பரிபூரணமாக இணைகின்றது. ஓ, சகோதரனே, சகோதரியே, நீங்கள் அதை கிரகித்துக் கொள்கிறீர்களா? பாருங்கள். நீங்கள் காண்கிறதில்லையா? தேவன் கூறின படி அது காலங்கள் தோறும் திரைமறைக்கப்பட்டு, இந்த கடைசி நாட்களில் அது திறக்கப்படும். அந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு இவ்வளவு காலமாக என்ன நடந்ததென்னும் முழு காரியம் ஜனங்களின் காட்சிக்கு வரும். ஏழாம் தூதனுடைய செய்தியின் மணி நேரத்தில், தேவனுடைய இரகசியங்கள் அனைத்தும் அந்த எலியாவில் வெளியாக்கப்பட வேண்டும் - இந்த கடைசி மணி நேரத்தில் எப்படி கிறிஸ்து தேவனுடைய குமாரனாக எவ்விதம் சபையிலிருந்து புறம்பாக்கப்படுவார் - அவர் மறுபடியுமாக எப்படி மனுஷகுமாரனாக வெளிப்படுவார் எவ்விதம் சபை ஒழுங்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் இவையாவும் கடைசி நாட்களில் வெளிப்பட வேண்டும், எவ்வித கோட்பாடும், எவ்வித ஸ்தாபனமுமின்றி, வார்த்தை முற்றிலும் தனிப்பட்ட நபரில் ஜீவிப்பது. நான் ஒருவனை எடுத்துக் கொண்டு, மற்றவனைக் கைவிடுவேன். நான் இதை எடுத்துக்கொண்டு, அதைக் கைவிடுவேன். அதில் எந்த கட்டுப்பாடோ, எந்த ஸ்தாபனமோ, எந்த ஒரு பிணைப்போ அல்லது எந்த ஒன்றோ கிடையாது; அது தேவனுடன் - அவருடன் மாத்திரமே உள்ள இருதயம் ஆகும். இப்பொழுது. நீங்கள் அவைகளை எழுதிக்கொள்ள விரும்பினால். அந்த ரகசியங்களில் சிலவற்றை நாம் குறிப்பிடுவோம். மத்தேயு 13ம் அதிகாரத்தில் ஸ்கோஃபீல்ட் என்பவர் இங்கே என்ன கூறுகின்றார் என்பதை நான் முதலில் எடுத்துக்கொள்கிறேன். பரி. மத்தேயு 13:11 “அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி அது உங்களுக்கு.... (அவருடைய சீஷர் களுக்கு)... உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அது அருளப் படவில்லை.” (அந்த இரகசியங்கள்) இங்கே அந்த இரகசியம்: ஒரு ''இரகசியம்” இரக சியமாயிருக்கின்ற வேதவாக்கியம் ...... ''முன்பு மறைக்கப்பட்டிருந்த சத்தியமானது இப்பொழுது தெய்வீகமாக வெளிப்படுத்தப்படுவது, ஆனாலும் வெளிப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட சக்தி இன்னுமாக இருந்து கொண்டிருப்பதாகும்”. அந்த பரம இரகசியங்களும் மகத்தான இரகசியங்களும் பின்வருமாரு: 1) பரலோக ராஜ்யத்தின் இரகசியம். அதைக் குறித்துத் தான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம், மத்தேயு 13:3-17, | கொரிந்தியர் 4:20, ரோமர் 14:17-18, லூக்கா 17:20-21, கொலோசெயர் 1:26-29. 2) இப்பொழுது, 2ம் இரகசியமானது, இந்த காலத்தில் இஸ்ரவேலினுடைய குருட்டு நிலையின் இரகசியம் ஆகும். பொருளோடு கூட - ரோமர் 11:25, 28-36. 3) 3வது இரகசியம், இந்த காலத்தின் முடிவு வேளையில் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களின் மறுரூபமாகுதலின் இரகசியம். | கொரிந்தியர் 15, மற்றும் தெசலோனிக்கேயர் 4:14-17. 4) 4வது இரகசியம் , யூதர் மற்றும் புறஜாதிகள் ஆகிய இரண்டையும் கொண்ட ஒரே சரீரமாகிய புதிய ஏற்பாட்டின் சபையின் இரகசியம். எபே 2:11-17, எபேசியர் 3:1-11, ரோமர் 16:25-27, எபேசியர் 6:19, (ஆங்கிலத்தில் உள்ளபடி, தமிழில் 20) கொலோசேயர் 4:3. 5) 5வது இரகசியம், கிறிஸ்துவின் மணவாட்டியாக சபை (Church) இருப்பதைக் குறித்ததான இரகசியம். எபேசியர் 5:28-32. 6) 6வது இரகசியம், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக ஜீவிக்கின்ற கிறிஸ்துவைக் குறித்தது. கலாத்தியர் 2:19-21; எபிரெயர் 13:8, பிலிப்பியர் 1:21, இன்னும் அநேக வேத வாக்கியங்கள். 7) 7வது இரகசியம் தேவனைக் குறித்த ஒன்று, எல்லா தெய்வீக ஞானமும் தேவத்தன்மையும் தம்முள் கொண்ட, தேவத்துவத்தின் முழுமையின் அவதாரமான கிறிஸ்து மனிதனுக்கு திரும்ப அளிக்கப்படுதல் (கொலோசெயர் 1:27-29; 2:1-3, 9; யோவான் 1:1-3, 14-18; | தீமோ . 3:16; கொலோசெயர் 2:9-10; // கொரி, 5:19). 8) சர்ப்பத்தின் வித்து, இது இத்தனை வருடங்கள் முழுவதுமாக ஒரு மறைக்கப்பட்ட இரகசியமாக இருந்து வந்தது. (ஆதியாகமம் 3:1-19; கொரிந்தியர் 11:1-3; மத்தேயு 13:24-30, 36-39; மத்தேயு 15:13; யோவான் 3:10-12) 9) 9ஆம் இரகசியம். தெசலோனிக்கேயர் 2:7-12 மற்றும் மேலும் காணப்படுகின்ற அக்கிரமத்தின் இரகசியம். 10) 10ஆம் இரகசியம் வெளிப்படுத்தல் 1:20ல் இருக்கின்ற ஏழு ந சத்திரங்களைக் குறித்த ஒன்று. ஏழு சபைகளுடைய ஏழு நட்சத் திரங்கள் அந்த ஏழு செய்தியாளர்கள், இன்னும் மற்றவை. 11) 11ஆம் இரகசியம் அந்த விபச்சாரியாகிய மகா பாபிலோனைக் குறித்த ஒன்று: வெளிப்படுத்தல் 17:1-18 மற்றும் 18:1-10. இந்த தூதன் முடித்து வைக்க வேண்டிய சில இரகசியங்கள் இவை, எல்லா இரகசியத்தையும் - தேவனுடைய எல்லா இரகசியங்களையும்..... இதை நான் பயபக்தியுடன் கூறட்டும், நான் என்னைக் குறித்து குறிப்பிடவில்லை, ஆனால் தேவனுடைய தூதனைக் குறித்து குறிப்பிடுகிறேன். 12) கிருபை என்பது தெளிவாக்கப்பட்டது; அவமானம் அல்ல, ஆனால் நிஜமான, உண்மையான கிருபை. நித்திய காலமாக எரிந்து கொண்டிருக்கும் நரகம் என்பது கிடையாது. அவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருப்பார்கள். நித்தியம் என்கின்ற எந்த ஒன்றிற்கும் தொடக்கமும் முடிவும் கிடையாது. நரகம் என்பது உண்டாக்கப்பட்டது. (வெளி. 19:20, 20:12-15). 13) கள்ள மற்றும் உண்மையான அபிஷேகம் பெற்றவர்களைக் குறித்த இந்த எல்லா இரகசியங்களும். (மத்தேயு 24:24; 5:45; 7:15-23). 14) உண்ர்ச்சி எதுவும் ஏற்படாமலே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறும் இரகசியம், ஆனால் கிறிஸ்து என்னும் நபர், அவர் செய்த அதே கிரியைகளை உங்களுக்குள் நடப்பித்துக் கொண்டிருப்பது. (எபேசியர் 1:13-14;அப்போஸ்தலர் 10:44-46, லூக்கா 1:38) 15) a) தண்ணீர் ஞானஸ்நானத்தின் இரகசியம் (அப்போஸ்தலர் 2:38-41), தீவிரவாத திரித்துவப் போதகம், பட்டப் பெயர்களான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஞானஸ்நானத்தில் நூழைத்தது. b) தேவத்துவத்தின் இரகசியம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தில் நிறைவேறுகின்றது. வெளிப் படுத்தல் புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ளபடியே , இந்த காலத்து சபை அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கின்றது. (இயேசுகிறிஸ்து - அந்த நபரே, தேவன் தாமே தம்மை மானிட மாம்சத்தில் திரையிட்டுக் கொள்ளுதல், கொலோசெயர் 2:9). இன்னும் வேறு சில இரகசியங்கள் உள்ளன. 16) அந்த அக்கினி ஸ்தம்பம் திரும்பவுமாக வருதல் (அப்போஸ்தலர் 22:6-11). அந்த காரியம்தான் இப்பொழுது சம்பவிக்கவேண்டியதாக இருக்கிறது. அதை நாம் காண்கின்றோம். ஓ, அந்த இரகசியங்களை பெயரிட்டுக்கொண்டே செல்லலாம் அல்லவா. இஸ்ரவேல் புத்திரரை வழிநிடத்தின அதே அக்கினி ஸ்தம்பம், அதே விதமான ஒன்று தமஸ்குவுக்கு சென்று கொண்டிருந்த சவுலை வீழ்த்தியது எனபதைக் காண்கின்றோம்! (அப்போஸ்தலர் 9:1-8). அந்த அதே அக்கினி ஸ்தம்பம் அதே வல்லமையுடன் வந்து, அதே விதமான காரியங்களைச் செய்து, அதே வார்த்தையை வெளிப்படுத்தி, வார்த்தைக்கு வார்த்தை வேதாகமத்துடன் அப்படியே நிலைக் கொண்டிருக்கின்றது. இதோவெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் இன்னும் சில : 17) மூன்றாம் யாத்திரை (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் யாத்திரைகள், யாத்திராகமம் 3:1-22; மத்தேயு 4:12-17; மத்தேயு 5-7 அதிகாரங்கள்; மல்கியா 4:5-6; வெளிப்படுத்தல் 10). 18) புதிய பிறப்பு (தேவனுடைய ஆவி உங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணுதல் - ஜலம், இரத்தம், ஆவி, யோவான் 5:6-8; யோவான் 3:1-8; கொரிந்தியர் 12:13). 19) அவருடைய இரண்டாம் சிருஷ்டி (வெளிப்படுத்தல் 3:14; | கொரிந்தியர் 15:45-50). 20) புதிய மனுஷன் - பழைய மனுஷன் (எபேசியர் 2:11-17; எபேசியர் 4:20-24), மற்றும் இரண்டு சுபாவங்கள். 21) ரோமர் 7:1-6 நம்முடைய நாளுக்கான தீர்க்கதரிசனம் : வார்த்தையாகிய கிறிஸ்துவை நம்முடைய காலத்தில் மறுபடியுமாக விவாகம் செய்தல் (வார்த்தை மணவாட்டி கிறிஸ்துவை மணந்து கொண்டிருத்தல்), பரலோக மணவாளனும் அவருடைய பூமிக்குரிய மணவாட்டியினுடைய இரகசிய இணைப்பு - இப்பொழுது தான் இணையும் நேரமாகும் (எபேசியர் 5:30-32). 22) மூன்று பகுதிகளில் புத்திர சுவிகாரம் (ரோமர் 8:15-16; எபேசியர் 1:5; (தமிழில் 1:6) ரோமர் 8:22-23). 23) நீங்கள் யார்? தேவனுடைய தன்மையிலிருந்து வந்தவர்கள் - தேவனுடைய நித்திய சிந்தை - வார்த்தை வித்து தேவனுடைய மரபு அணு இப்பொழுது மாம்சத்தில் தோன்றியுள்ளீர்கள் (வெளிப்பட்டுள்ளீர்கள்), (யோவான் 17:6, 16) 24) நாம் மூன்று பகுதிகளான நபராவோம் - ஆத்துமா, ஆவி, சரீரம் மற்றும் புலன்களையுடையவர்கள் (தெசலோனிக்கேயர் 5:23-24) 25) மீட்பின் திட்டம் (ஏதேன் தோட்டத்திலிருந்து கல்வாரி வரை, மற்றும் பிறகு மறுபடியுமாக ஏதேனுக்கு), ஆதியிலிருந்து இரத்தம் - இன்றைக்கு : இரத்தத்தைப் பூசு (இரத்தம் சொட்டும் வார்த்தை) அதற்கு பிறகு அடையாளத்தைப் போடு!. (ஆதி. 3:21; யோவான் 1:29; வெளி. 5:6) 26) விவாகமும் விவாகரத்தும் (மத். 5:31-32; மத். 19:3-12). 27) இன்றைக்கு எழுப்புதல் என்றால் என்ன: வார்த்தையோடு சரியாக இணைந்து வருதல் (1 பேதுரு 1:12-13). 28) இன்றைக்கு மணவாட்டியின் மறுரூபப்படுதல் (ரோமர் 12:2; எபே. 4:20-24). 29) மூன்று விதமான வாசஸ்தலங்கள்: பூமிக்குரிய சரீரம், பரலோகத்திற்குரிய சரீரம் (ஆவிக்குரிய சரீரம்), மகிமைப்படுத்தப்பட்ட உயிர்தெழுந்த சரீரம் (1 கொரி. 5:1-5; பிலி. 3:20-21). 30) நீதிமானாக்கப்படுதல் (Being Justified) - இதன் பொருள் நீ ஒருபோதும் பாவமே செய்யவில்லை (Never done) என்பதாகும். (ரோமர் 8:1-2). 31) முன்குறிக்கப்படுதல் மற்றும் தெரிந்து கொள்ளுதலின் இரகசியம் (ரோமர் 8:28-30; எபே. 1:3-5). 32) கிறிஸ்துவுக்குள் பரிபூரணம் (மத். 5:48; எபி. 5:13-14; எபி. 6:1-3; பிலி 3:15-16). 33) உட்புற உயிர்த்தெழுதல் மற்றும் வெளிப்புற உயிர்த்தெழுதல் (முதல் உயிர்த்தெழுதல்), அல்லது உயிர்த்தெழுதலின் முழுமை (எபே. 2:1-7; தெச. 4:16-17; வெளி. 20:4-6). 34) வெளிப்படுத்தல் 10:1-7ன் ஏழு இடிழக்க இரகசியம். 35) தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான மறைவான மன்னா. 36) கர்த்தருடைய வருகையின் இரகசியம், கிறிஸ்துவின் மணவாட்டி (Aride coming of Christ) வருகையின் இரகசியம் மற்றும் எடுத்துக்கொள்ளபடுதலின் இரகசியம். அவர் மனுஷகுமாரனாக, தேவ குமாரனாக வருதல், நம்முடைய நாளில் மறுபடியுமாக மனுஷ குமாரனாக, பிறகு தாவீதின் குமாரனாக அவர் வருதல் ( தெச. 4:13-17; லூக்கா 17:30-36; வெளி. 1:7). 37) ஏழு முத்திரைகள் மற்றும் குதிரை சவாரி செய்யும் நான்கு பேர்களைக் குறித்த இரகசியம் (அவர் முத்திரையை உடைத்து, அதை வெளிப்படுத்தி தம்முடைய சுவிகாரத்தை நமக்கு அவர் அளிக்கின்றார், வெளி. 6:1-17; 8:1-5). 38) ஆறாம் முத்திரையின் இரகசியம் - மூன்று பகுதிகளில் (வெளி 6:12-17; மத்.24:29-31). 39) ஏழாம் முத்திரையின் இரகசியம் - மூன்று பகுதிகளில். 40) ஆவிக்குரிய வேதாகமப்பிரகாரமான இஸ்ரவேலின் இரகசியம் (ஆவிக்குரிய விசுவாசம் - ஆபிரகாமின் வித்து, கலா. 3:7-9, 29; கலா. 6:16). 41) லவோதிக்கேயா சபைக் காலத்தில் தேவ குமாரனாக, தேவனுடைய பரம இரகசியம், அவருடைய மகத்தான மூன்று பகுதிகளாலான நோக்கம் இப்பொழுது வெளிப்படுகின்றது (கொலோ 1:15-19,24-28; கொலோ . 2:9-10; கொரி. 5:18-19). 42) கிறிஸ்து தம்முடைய சபையிலிருந்து எப்படி வெளியே தள்ளப்படுகிறார் என்பதும் (வெளி. 3:20-21), பெந்தெகொஸ்தே காலம் மற்றும் மணவாட்டியின் காலத்தைக் குறித்த இரகசியம். 43) யுகங்களின் மாற்றங்கள் (எபே. 1:9-10) 44) 7 பரிமாணங்கள் - நம்முடைய சரீரப்பிரகாரமான மரணத்திற்குப் பிறகு நாம் எங்கே செல்கின்றோம்? (லூக்கா 16:19-31; பிலி. 1:21-24; யோவான் 14:1-3). 45) ஆயிர வருட அரசாட்சி - முதலாம் வானம் - யார் அங்கே இருப்பார்கள்? (ஏசா. 65:17-25; வெளி. 20:4; வெளி. 21:1) 46) இரண்டாம் உயிர்த்தெழுதல் மற்றும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு (வெளி. 20:4-6, 11-15). 47) புத்தியுள்ள மற்றும் புத்தியில்லாத கன்னிகைகளின் நிலைமை மற்றும் அவர்களுடைய எதிர்காலம் (மத். 25:1-13). 48) ஜலம், இரத்தம் மற்றும் ஆவிக்குரிய அக்கினியினால் பூமி புதுப்பிக்கப்படுதல் (2 பேதுரு 3:1-15; வெளி. 21:1). 49) புதிய வானமும் புதிய பூமியும் (2 பேதுரு 3:11-13; வெளி, 21:1) 50) பரலோக எருசலேம் (வெளி. 21:2-7,9-27; வெளி. 22:1-5). தேவன் இதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, தேவ புத்திரர் வெளிப்படும் கடைசி நாட்களில் அவர்களுக்கு வெளிப் படுத்துவதாக வாக்களித்துள்ளார் (ரோமர் 8:18-23). உலகத்தோற்றத்திற்கு முன்பு அவருடன் கெம்பீரித்த தேவபுத்திரருக்கு (யோபு 38:1-7), கடைசி நாட்களில் தேவத்துவம் மற்றும் இதைப் போன்ற மகத்தான வெளிப்பாடுகளும் அளிக்கப்படும், அவர் இந்த காரியங்களை தேவ புத்திரர்களுக்கு வெளிப்படுத்திக்காட்டுவார். அதை வேதாகமம் போதிக்கிறது என்று நமக்குத் தெரியும். இதோ நாம் அங்கு வந்திருக்கிறோம். அதன் காரணமாகத் தான் தேவன் இவைகளை நமக்குத் திறந்து கொடுக்கிறார். தேவன் தமது புத்திரரை வெளிப்படுத்தலுக்குள் கொண்டு வருகின்றார். அவர் மனித அறிவுக்கு அப்பால் ஆவிக்குரிய வெளிப்பாடுகளுக்குள் சென்று அதைக் கீழே கொண்டு வருகிறார். இதிலே ஞானம் விளங்கும்'' என்று இந்த வேதத்திலிருந்து நாம் போதிக்கிறதில்லையா? வேதாகமப் பள்ளியில் கற்றதல்ல, ஆனால் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக முழங்காற்படியிட்டு, தேவன் அவனுக்களிக்க விருப்பங்கொண்டதை கற்பது : தேவ புத்திரர் வெளிப்படும் காலம். (மத்தேயு 11:27-29) அந்த பரமரகசியங்கள் ஏழு முத்திரைகளில் அடங்கியிருந்தன. இந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டபோது, முத்திரைகள் முழு வேதாகமத்தையும் திறந்து விட்டது. அந்த ஏழு முத்திரைகள் ஏழு ரகசியங்களால் முத்தரிக்கப்பட்டிருந்தன. இந்த ஏழு முத்திரைகளும், பரமரகசியம் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருந்தன. அது மீட்பின் புஸ்தகம். அவருடைய வார்த்தை மன்னாவாகும். அது தான் பரிபூரணமான மன்னாவாகும். அதைக் கொண்டு ஒரு மனிதன் பிழைப்பானானால் அவன் மரிப்பதேயில்லை. ஆனால் ஆதி பிதாக்களின் மரணத்திற்குப் பிறகு சரியான சத்தியத்தை யாருக்குமே தெரியாதிருந்தது போல் காணப்பட்டது. அதற்குப் பிறகு சிறிது காலத்தில் இந்த மன்னா மக்களுக்கு மறக்கப்பட்ட ஒன்றைப்போல ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் தேவன் வெளிப்பாட்டின் மூலமாக அதைத் திரும்ப அளிக்க ஆரம்பித்தார், இந்த கடைசி நாள் வரை மறைக்கப்பட்டிருந்த அது வெளிப்படுத்தல் 10:7ன்படி ஒரு தீர்க்கதரிசி வந்து எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துவார் அதன் பிறகு கர்த்தர் வருவார். இப்பொழுது, நான் கூறுவதென்ன வென்றால், ஒவ்வொரு சபைக் காலத்திலும் அந்தந்த சபையின் செய்தியாளர்கள் மறைக்கப்பட்டிருந்த சத்தியத்தை பெற்றுக் கொண்டார்கள். அது அப்பங்களையும் மீன்களையும் மக்கள் கூட்டத்திற்கு கொடுக்கும்படிக்கு சீஷர்களுக்கு கூறப்பட்டது போல அவர்கள் அதை தங்களுக்கு மாத்திரமே அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம் பிட்கப்பட்ட உணவைக் கொடுத்தார், அப்பொழுது அவர்கள் அதை எடுத்து மக்களிடம் கொடுத்தார்கள். ஜெயங்கொள்ளுகிற வனுக்கு தேவன் தம்முடைய மறைவான மன்னாவை கொடுக்கின்றார் (வெளி. 2:17). ஆகவே அது வேறு விதமாக இருக்கமுடியாது. ஏற்கெனவே வெளிப்பட்டிருக்கின்றதை வெறுப்புடன் புறக்கணிக்கின்ற வர்க்ளுக்கு அவர் தம்முடைய பொக்கிஷங்களை திறந்தளிக்கமாட்டார். சத்துருவைச் சந்திக்க நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடியை உயர்த்தினவர்களாய் இருபுறமும் கருக்குள்ள அந்த பட்டயத்தை உபயோகிக்கத்தக்கதாக அவருடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டவர்களாய், கேடயத்தை கையில் பிடித்து, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்து கொண்டவர்களாய் நாம் இங்கிருந்து செல்வோம். ஏனெனில் சத்துரு நாளுக்கு நாள் பலமைடைந்து இன்னும் வல்லமையடைந்து வருகின்றான். சத்துரு வெள்ளம் போல் வரும்போது தேவனுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார் (ஏசாயா 59:19). நாம் இந்த காரியங்களின் முடிவை அடைந்திருப்போமானால் ..... தேவரகசியங்கள் நமக்கு நிறைவேறிவிட்டன. நாம் அதிக பலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் - சபையை எடுத்துக்கொள்ளப்படுதலில் மகிமைக்கு கொண்டு செல்வதற்கென மேலான சக்தியாகிய எடுத்துக்கொள்ளப்படும் சக்திக்காக அதை நாம் பெறவேண்டும், நாம் ஜீவனுள்ள தேவனுடைய தாசர்கள் என்னும் அடிப்படையில் வருகின்ற இந்த ஆண்டை ஒரு சவாலுடன் சந்திப்போம். முன் காலத்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போல் நாமும் இக்காலத்து பிசாசுகளுக்கு தலைவணங்காதிருப்போமாக. இப்பொழுது கூறப்பட்டவைகளை நம்முடன் கூட கொண்டு சென்று போரில் மும்முரமாக ஈடுபடுவோமாக. பிதாவே, அவர்கள் கொண்டிருப்பதைக் கடிந்து கொள்வ தென்பதல்ல அது; அவர்களுக்கு இன்னும் அதிகமான எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான கிருபையை அளிக்க முயல்வது தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென நான் ஜெபி கின்றேன். ஏனெனில் நாம் எடுத்துக் கொள்ளப்படுதலின் வல்லமையைக் கொண்டிருக்க வேண்டிய அந்த மணி நேரமானது வரும், சரீரத்தை சுகப்படுத்துவதற்கு மாத்திரமல்ல ஆனால் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே சரீரத்தை மறுரூபமாக்கவே ( கொரி. 15:51-52). அவர் கிரயத்திற்கென்று வாங்கின, தம்முடைய மகத்தான மரணத்தின் மூலமாக அவர் அதை மறுரூபமாக்கத்தக்கதாக, கிறிஸ்து அவர்களுடைய சரீரங்களில் தத்ரூபமாகவே இருப்பார். கடந்த இரவு நான் பேசின அந்த அடையாளத்தை இன்றைக்கு அவர்கள் எடுத்து அதை தங்களுக்கு முன்பாக பிடித்துக் கொண்டு இந்த மகத்தான விண்வெளி வீரருக்குள்ளாக செல்வார்களாக (பிதாவே, இதை அருளும்.), தரிசனங்கள், வல்லமைகள் மற்றும் மறுபுற உலகங்கள் அறிந்துள்ளன. ஓ தேவனே, தேவனுடைய அந்த மகத்தான இரகசியங்கள் இந்த ஏழு முத்திரைகளுக்குள் அவிழ்க்கப்பட்டு மனிதருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறதே, பிதாவே இதை அருளும்.